தினம்தினம் காதலர் தினம்
தினம் தினம் காதல் தினம் !
*********
ஓடாத நதித்
தேங்கிக் குட்டையாகும் /
தேடாதப் பொருள்
கிடந்துக் குப்பையாகும் /
மீட்டாத வீணை
வெறும் கட்டையாகும் !
ஓட்டாத வாகனங்கள்
வீணாய்ப் போகும் /
வளராத யாதொன்றும்
குறைவாய்த் தோன்றும் !
தினந்தினமும் காதல் தினம் மகிழ்வாய்ப் பூக்கும் !
-யாதுமறியான்.