ஒற்றை செல்லாய் அவள்

முகிலை
திறந்து
எட்டிப் பார்க்கும்

முழுமதி
கண்டேன்
சன்னலோரம் அதிசயம்

ஓரவிழிப் பார்வை
ஓரிரு நொடிகள்தான்
நிலவவள் வீசீனாள்

ஓராயிரம் செல்கள்
என்னுள்
வெடித்துச்சிதற

ஒற்றை செல்லாய்
முளைத்தாள்
இதயத்தில் அவள்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (16-Feb-22, 1:46 pm)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 210

மேலே