நினைவு கற்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறேன் 2
கால் பதிந்த சுவடுகள்
காலத்தின் கட்டாயங்கள்
பால் மறந்த பருவத்தில்
பாடித் திரிந்த பட்டாம் பூச்சிகள்
கண்களில் மின்னல்கள்
கால்களில் தாளங்கள்
ஏறிஇறங்கும் சுவாசங்கள்
காதலின் ஏக்கங்கள்
கனவுப் பாதையில்
நெடுந்தூரம் பயணம்
காலை வந்தவுடன்
கால்கள் முறிந்துவிடும்.
மீண்டும்
மாலையில் கால்முளைக்கும்
பயணம் தொடரும்.
அதற்கொரு முடிவுமில்லை
அந்தரங்கம் இறப்பதுமில்லை
ஆன்மாவில் கலந்துவிட்ட
ஆருயிர் காதலியே
உன்னால்தான் இன்னமும்
மணல் அரிசியை
அளைந்து அளைந்து
நினைவு கற்களை
பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்....!