லிமரைக்கூ

லிமரைக்கூ
===========
'அம்மா பசிக்குது' யாசகன்
"இன்று போய் நாளை வா"
மூடிய கதவின் வாசகன்
*
பசியால் துடித்து மாண்டவன்
பண்டிகை நாளில் படையல் போட்டு
வண்ங்கிக் கொள்ள ஆண்டவன்
*
மறைவாய்க் கையில் தருக
கேட்டு வாங்கி அதிகாரி சொன்னார்
நன்றி மீண்டும் வருக.
*
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Feb-22, 2:03 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 55

மேலே