இல்லென்னும் எட்டும் இறுதிக்கண் ஏமாப்பு இல – அறநெறிச்சாரம் 65

இன்னிசை வெண்பா

அறிவுடைமை மீக்கூற்றம் ஆன குலனே
உறுவலி நற்றவம் ஓங்கிய செல்வம்
பொறிவனப்பின் எம்போல்வார் இல்லென்னும் எட்டும்
இறுதிக்கண் ஏமாப்(பு) இல. 65

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

அறிவாலும், புகழாலும், உயர்ந்த பிறப்பாலும். மிக்க வலிமையாலும், நல்ல தவத்தாலும், உயர்ந்த செல்வத்தாலும், நல்லூழாலும் உடல் அழகாலும் எம்மைப் போன்றவர் இல்லையென்று கூறி மகிழும் எட்டுவிதமான செருக்கும் முடிவில் இன்பம் செய்யாவாம்.

குறிப்பு:

மீக்கூறு - மேம்படக் கூறும் புகழ், பொறி – ஊழ், வனப்பு – மேனியழகு, ஏமாப்பு - பாதுகாப்பு; இன்பம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Feb-22, 3:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே