அதுக்குத்தான்....
❣️💙❣️💙❣️💙❣️💙❣️💙❣️
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
❣️💙❣️💙❣️💙❣️💙❣️💙❣️
ஒருவனுக்கு......
ஒரே சமயத்தில்
தலையில் கல்பட்டு
கையில் முள்பட்டு
மார்பில் வேல்பட்டு
காலில் தேள்கொட்டி
கண்களில் மண் விழுந்து
மேனியில்
தேனீக்கள் கொட்டி
கழுத்தில் வெட்டு விழுந்து ....
காதில் தாய் இறந்த
செய்தி விழுந்து.... போது
அவனிடம் உண்டாகும்
வேதனைகளையும்
துன்பங்களையும்
துயரங்களையும்
கஷ்டங்களையும்
வலிகளையும்
நான் அனுபவித்துக்
கொண்டிருக்கிறேன்
அடிப்பெண்ணே!
நீ மௌனமாக செல்வதால்....!
💓💓💓💓💓💓💓💓💓💓💓
என் இதயத்தை
திருடியவளே!
உன்னை
என் கண்களுக்கு
காட்சிப்பொருளாக
வைக்கவோ ....
உன்னை
என் காமத்திற்கு
இரையாக்கவோ...
உன்னை
பொழுதுபோக்கு
கருவியாக
பயன்படுத்தவோ .....
உன்னை
என் ஆசைக்கு
அடிமையாக்கவோ ......
உன்னை
என் சுயநலத்தின்
சுகத்திற்கு பலியாக்கவோ....
உன்னை
என் சுமைகளை
தாங்க தூணாக்கவோ
நான் நேசிக்கவில்லை...
நீ திருடிச்சென்ற
என் இதயத்திற்கு
பதிலாக
உன் இதயத்தை
நான் வைத்துக்
கொள்ளத்தான்
நேசிக்கிறேன் ......
நீயே சொல்
இதயம் இல்லாமல்
யராவது
உயிர் வாழ முடியுமா..?
*கவிதை ரசிகன்*
❣️💙❣️💙❣️💙❣️💙❣️💙❣️