பார்வைகள்

கடைவீதியில்
கைச்சுமந்து நடக்கையில்
பா(ர்)வை ஈக்களுக்கு
பலகாரமாகி
மொய்க்கும் விழிகளை
மோகமென மொழிபெயர்த்து
தறிக்கெட்டோடும் மனசு
இத்தகு சேவகன் - தனக்கு
வாய்க்கலையே எனும்
ஏக்க புத்தகத்தின்
எழுத்தழிந்த பக்கமாகவும்
அவை இருக்கலாமென்ற
குறுக்குச்சாலில்
குடைசாயவே செய்கிறது!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (20-Feb-22, 8:12 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 194

மேலே