சிவந்த மருதாணி சிவபழகே 555

***சிவந்த மருதாணி சிவபழகே 555 ***
நெஞ்சினிலே...
மேற்கத்திய
கலாசார உடையில்...
அழகு வளைவுகளை காண்பித்து
என்னை கிறங்கடிக்கிறாய்...
கோபுர முன்னழகில் என்னை
மூச்சடைக்க செய்கிறாய்...
என்னை ஆள
ஒரு இளவரசி வேண்டும்...
அது
நீயாக வேண்டும்...
தினம் எனக்கு
பணிவிடை செய்து...
சிவந்திருக்கும் உன்
கைகளுக்கு மருதாணியிட ஆசை...
நித்திரையில் நீ இருக்க
ஆசையோடு மருதாணி பறித்து...
காதலோடு
சேர்த்து அரைத்து...
உன் உள்ளங்கைகளிலும்
உன் பாதங்களிலும்...
மருதாணி
கோலமிட வேண்டும்...
அதிகாலையில் துயில் கலைந்து
நீ கண்விழித்து எழும்வேளை...
உன் கைகள் மட்டுமல்ல
உன் முகமும்...
என் ஆடையும்
சிவந்திருக்க வேண்டும்...
உன்னை என் குடும்பத்தில்
ஒருத்தியாய் ஏற்றுக்கொண்டேன்...
நீயும் என்னை
உன் குடும்பத்தில் ஒருவனாய்...
ஏற்று கொண்டால்
சம்மதம் சொல்...
என் மருதாணி
சிவப்பழகே...
காத்திருப்புடன் நான்.....
***முதல்பூ .பெ.மணி.....***