இலவங்கப்பட்டை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தாதுநஷ்டம் பேதி சருவவிஷம் ஆசியநோய்
பூதகிர கஞ்சலந்திப் பூச்சிவிஷஞ் - சாதிவிஷம்
ஆட்டுமிதைப் போடிருமல் ஆகியநோய்க் கூட்டமற
ஓட்டுமில வங்கத்(து) அறி

- பதார்த்த குண சிந்தாமணி

இலவங்கப்பட்டை தாது நட்டம், பேதி, பல்வகை விடங்கள், ஆசிய நோய், பூதக்கிரகம், சிலந்தி, பாம்பு விடங்கள், சுவாசகாசம் முதலிய நோய்களைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-22, 7:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே