வேர்
ஆயுதம் இல்லாமல்
ஆழமாய் செல்வேன்
ஆகாயம் தரும் நீரைச்
சேமித்துக் கொள்வேன்
ஆட்களே இல்லாமல்
ஆங்காங்கு திரிவேன்
ஆழ்துளை கிணற்றுக்கும்
தண்ணீரைத் தருவேன்
ஏகாந்தம் என்னோடு
எப்போதும் இருக்கும்
எட்டாத ஆழத்தில்
என் கால்கள் நடக்கும்
என் வானம் எப்போதும்
கீழாக இருக்கும்
என் மனம் சிறகின்றி
அதிலேதான் பறக்கும்
மழை வரும் நேரமது
மகிழ்ச்சியோடு இருப்பேன்
மாற்றம் வரும் வேலையது
மனம்விட்டு சிரிப்பேன்
மரத்தினது புகலோங்க
மண்ணுக்குள்ளே செல்வேன்
என் பெயர் கேட்டாலே
வேர் என்று சொல்வேன்.