கட்டி சுகம்
🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥
'தொட்டில் சுகத்தை'
மறப்பதற்கு முன்பே !
கட்டில் சுகத்தை'
நினைவு படுத்திவிட்டது
இன்றைய
திரைப்படங்கள்....
இன்றைய நடிகைகள்
சம்பாதிப்பது
நடிப்பினால் அல்லர்
இடுப்பினால்...!!
அன்று
கதைக்காக
உலகத்தின்
மூலை முடுக்கெல்லாம்
படம் எடுத்தார்கள்.....
இன்று
சதைக்காக
நடிகையின்
முலை இடுக்கிலெல்லாம்
படம் எடுக்கின்றனர் .....
அன்றைய
நடிகைகள்
நடித்துக்காட்டினர்
இன்றைய நடிகைகள்
"காட்டி நடிக்கின்றனர் "
"பால் சுரப்பதற்கு"
பயன்படுத்தப்பட்ட
பெண்களின் மார்பு....
இன்றும் பயன்படுகிறது
"பணம் கறப்பதற்காக"
பாசக்காட்சிகள்
இருந்த காலம் போய்
இப்போதெல்லாம்
ஆபாசக்காட்சிகளே!
அதிகம் இருக்கின்றன.....
கதையை நம்பி
படம் எடுத்தனர்
இன்று நடிகையின்
சதையை நம்பி
படம் எடுக்கின்றனர் .....
எல்லாவற்றிக்கும்
ஒரு பக்கம் இருந்தாலும்
நடிகையின்
ஜாக்கெட்டிற்கு மட்டும்
ஒரே! பக்கம் தான்.....
கேட்டால்
இது வியாபாரம் என்று
உங்களுக்குச் சொல்லத் தெரியும் அதனால்
எத்தனை மனங்கள்
சேதமடைகிறது என்று
உங்களுக்குத் தெரியுமா....?
அழகாகக் காட்ட
நடிகைகளிடம்
ஆயிரம் இருக்கும்போது
ஏன் தான் இவர்கள்
புனிதமானத் தொப்புளை
ஆபாசமாகக் காட்டுகின்றார்களோ..?
*கவிதை ரசிகன்*
🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥🎥