கருவறையில்

உடலும் உயிரும் உருபெற
தவம் கிடந்தோம்
அன்னையின் கருவறையில்!

அறிவு ஞானம் வளர
தவம் கிடந்தோம்
பள்ளி கருவறையில்!

உன்னுயிரும் என்னுயிரும்
கலந்து ஓர்உயிரானோம்
காதல் கருவறையில்!

தீமைகள் தோற்று
நன்மைகள் ஜெயிக்க போராடுகிறோம்
வாழ்க்கை கருவறையில்!

வாழ்க்கை முடிந்ததும்
நிரந்திர துயில் கொள்கிறோம்
பூமி தாயின் கருவறையில்!

எழுதியவர் : (8-Mar-22, 3:51 pm)
சேர்த்தது : பிரதீப்
Tanglish : karuvaraiyil
பார்வை : 62

மேலே