பொன்னும் இரும்பென

பலவகைக் கட்சிகள் பலவகைத் திட்டங்கள்
விதவித முறையிலே பொருந்தா வகையிலே
பொய்யினை புளுகியே வளர்ச்சியில்

பலவகைத் தலைவரும் பலநிலைத் தொண்டரும்
குழுமிய வகையிலே கூட்டத்தில் பேச்சுகள்
பொய்யினை நம்பியே மகிழ்ச்சியில்

பலமுறை சொன்னதை பலதடவைச் சொல்லியே
அலையென வந்தவர் குதுகலித்து மகிழவே
பொய்யினை மெய்யாய் கூறியே.

எப்பிறவியில் நானும் செய்தோனோ புண்ணியம்
இப்பிறப்பில் தமிழக மண்ணில் மனிதனாய்
தப்பியே பிறந்து விட்டேன்

இன்னலும் துயரமும் எங்கிலும் புகுந்து
மின்னலாய் சூழ்ந்தே யவரையும் சிதைத்திட
பொன்னும் இரும்பென ஆனதாய்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Mar-22, 6:55 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 25

மேலே