மகனே மகனே..!!
மகனே ஓ மகனே
வயிற்றில் நீ பூத்ததிலிருந்து
உன் பசிக்கு நான் உணவு உண்டேனடா..!!
உன்னை தாலாட்டி சீராட்டி
என்று நான் தள்ளாடும்
வயதை வந்தேனடா மகனே..!!
மகனே மகனே மறு பிறவி
இருந்தால் உன் மனைவி
வயிற்றில் சிசுவாக பிறக்க
வேண்டும்..!!
உன் அன்பு மட்டும்
என்னையே சேர வேண்டும்
என் வளர்ப்பின் உச்சம் மொத்தம்
கண்ணெதிரே காணும் வேண்டும்..!!