காதல்
அகிம்சை காதல் ...
பாவையே கிருத்துவ மதத்தில் பிறந்துவா !
நான் இஸ்லாமிய மதத்தில் பிறந்து வருகிறேன்
இருவருக்கும் பிறக்கும் மகனையோ மகளையோ !
இந்துவாக வளர்க்கலாம்
அங்கேயே மணம் முடிக்கலாம்
மூமதத்தை ஒன்றக்கலாம்
முத்தமிழை வளர்க்கலாம்
இறைவன் ஒன்றேயென்று கருதலாம்
மொழிகளையெல்லாம் காக்கலாம்
உலகமே நமதுயென்று துணியலாம்
சாதி மதப்பூதங்களை விரட்டலாம்
நதிகளை இணைக்கலாம்
விழாக்கள் எடுக்கலாம்
மகிழ்ச்சி கொள்ளலாம்
பகிர்ந்து உண்ணலாம்
நம்முலகிற்கு அகிம்சையை கற்று கொடுக்கலாம்
அகிம்சை விருதை வாங்கலாம்...