தகனம்
அந்திமாலையில்
சூரியன் குளிர்ந்திருந்தது
நிழலென படியும் இருள்
என் கைவிரல்களில்
எரியும் சிகரெட்
தகனம்
மெல்ல கமழும்
புகை
மேகத்தில்
எப்பொழுதோ நிறுத்தாகிவிட்டது
நட்சத்திரங்களையும்
நீல்வானையும், நிலவையும்
அர்த்தமுற்று கண்டு சிரித்து
இன்று
நாம் பேணிக்காத்த
உறவில்
மின்னல்
நம் வாழ்வை பிளந்தது
பிணியென
நீள்கின்றன
அழியா இரவுகள்..