செப்ப நெறிதூரா வாறு மூன்று – திரிகடுகம் 83

இன்னிசை வெண்பா

உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்ப நெறிதூரா வாறு 83

– திரிகடுகம்

பொருளுரை:

உப்பினது பெரிய குவியல் தன்னில் நீர் படிந்தால் இல்லாமற் போகும்;

நட்பினது செழித்த முளையானது பொய்யாகிய நெருப்பைப் பெய்தால் அழிந்து போகும்;

நடுவுநிலைமையுடையார் மழை போல எல்லார்க்கும் ஒப்ப உபகரிப்பார்;

நீர் படியாமையும் பொய் வழங்காமையும் மழையை ஒத்தலும் ஆகிய மூன்றும் நல்வழியை தூராமைக்குக் (தூர்ந்து போகாமலிருக்கச் செய்யும்) காரணமாகிய சாதனங்களாகும்.

கருத்துரை:

உப்பின் குவியல் நீர் படியாமையும், நட்பினர் பொய் வழங்காமையும், மழையனையார் செப்பமுடைமையும் நல்வழியைக் கெடுக்கா முறைகள் எனப்படுகிறது.

படிதல் - தோய்தல், பொருந்தல்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Mar-22, 12:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே