சாருலதா அத்யாயம் 9
'சென்னை பன்னாட்டு வருகை'
'தமிழ்நாடு உங்களை அன்போடு வரவேற்கிறது '
அப்பா....என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் நம்ம ஊர்தான்......
இந்த வெயில்....
இந்த புகை.....
இந்த நெரிசல்.....
இந்த கூவம்.....
அதன் நாற்றம்....
என்னவோ இப்பத்தான் உயிரே வந்த மாதிரி இருக்கு. நன்றாக மூச்சை இழுத்து .....நன்றாய் பெருமூச்சை விட்டுக்கொண்டோம்.
' Apollo Hospitals ' சித்தார்த்தனை உடனே ஏற்றுக்கொண்டது. அவனும் மகிழ்ச்சியோடு சேர்ந்துகொண்டான். ' Aksharaa Appartments ' டபுள் பெட்ரூம் பிளாட்ஸ் லதாவும் சித்தார்த்தனும் குடி புகுந்தார்கள். அன்று மாலை அப்பார்ட்மெண்ட் கமிட்டி மீட்டிங் கூடி அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியது. வந்திருந்த குடியிருப்புக்காரர்களை அறிமுகம் செய்து வைத்தார் செகரட்டரி.
"Dr. சித்தார்த்தன் பேமலியோட உங்களை நம்ம அப்பார்ட்மென்டுக்கு வரவேற்பதில் நாங்க எல்லோரும் சந்தோஷமும் பெருமையும் படுகிறோம். இங்க நாங்க எல்லோரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள் போல்தான் உறவாடிக்கொண்டிருக்கிறோம்.எங்களுக்குள் ஜாதி இல்லை....மதம் இல்லை ....ஏற்றத்தாழ்வும் இல்லை.எல்லோரும் தீபாவளியும் கொண்டாடுவோம்...கிறிஸ்த்மஸையும் கொண்டாடுவோம்....ராம நவமியையும் கொண்டாடுவோம்..... ரம்ஜானையும் கொண்டாடுவோம். ஆக மொத்தம் இந்த அப்பார்ட்மெண்ட் ஒரு டிபிகல் 'பாரத விலாஸ்'. 'Welcome to Bharatha Vilas '
"ஆகா....இதைத்தான் நாங்களும் கற்பனை செய்துகொண்டும்.....எதிர்பார்த்துக்கொண்டும்...நம் நாட்டுக்கு திரும்பி வந்தோம்.நாங்க நெனச்ச மாதிரியே இங்கு அமைஞ்சதற்கு நாங்க கொடுத்துவச்சிருக்கோம். உங்க அன்புக்கு தலைவணங்கி, அந்த 'இன்டெக்ரிட்டி'க்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என உறுதிசெய்கிறோம்.ரொம்ப...ரொம்ப...சந்தோசம்...."
"Dr .சித்தார்த்தன் ...இன்னும் ஒருவரைத்தான் நான் அறிமுகம் செஞ்சுவைக்கல...முடியல...ஏன்னா அவங்க ரொம்ப...ரொம்ப... பிசி. ஆமா அவங்களும் ஒங்களைப்போல லீடிங் கைனக்கோலஜஜிஸ்ட். உங்களுக்கு கூட தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். அவங்க பேர் Dr .சாருமதி".