சாருலதா அத்யாயம் 10
"Excuse Me .... உள்ளே வரலாமா?"
"வாங்க...வாங்க... ஆனா நீங்க யாருன்னு....."
"நான் Mrs. லதா...நேத்துதான் குடி வந்தோம். கமிட்டி செகரட்டரி எல்லோரையும் அறிமுகப்படுத்தினார்.உங்களைத்தவிர...நீங்க ரொம்ப பிசீன்னு வேற சொன்னார். அதனால உங்கள தொந்தரவு செய்யவேண்டாம்னுட்டு...நானே சுய அறிமுகம் செஞ்சிக்கலாம்னு வந்துட்டேன். உங்களுக்கு தொந்தரவு ஒன்னும் இல்லையே...அப்படியே இருந்தாலும் எனக்கு ஒரு கவலையும் இல்ல..இனி அப்பப்ப உங்களை தொந்தரவு செஞ்சிகிட்டே இருப்பேன். நீங்க என்ன நெனச்சாலும் சரி..." என்று கட...கடவென்று பொரிந்து தள்ளினாள் லதா.
அவளை ஆச்சரியமாய் பார்த்த சாருமதி, கொஞ்சம் ஆசுவாசிப்படுத்திக்கொண்டு "வாங்க...வாங்க .ரொம்ப சந்தோஷம்தான். இந்த மாதிரி அன்புத்தொல்லைகள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். ஆனா இது என்ன ரொம்ப நாள் பழகின மாதிரி...ரொம்ப தெரிஞ்சவங்க மாதிரி....ஆச்சரியமா இருக்கு. Anyway Iam ....... "
"எனக்குத்தான் தெரியுமே...Dr.சாருமதி..சென்னையில லீடிங் கைனகாலஜிஸ்ட்...ரொம்ப...ராசியான டாகடர். MBBSல கோல்டு மெடலிஸ்ட்....அதுமாத்திரமில்ல Best outgoing student வேற ....."
"அடேங்கப்பா...இது என்ன கனவா?....இல்ல நனவா?......மந்திரமா? இல்ல மாயமா?. எப்படி இதெல்லாம்....? இருங்க...இருங்க...ஒரு தடவ கிள்ளிப் பாத்துக்கிறேன். என்னால நம்பவே முடியலையே...!"
" இதோ பாருங்க இனிமே என்னை வாங்க...போங்கன்னு கூப்பிட வேண்டாம். லதான்னு கூப்பிட்டாலே போதும்.நான் உங்களைவிட சின்னவதான். ஆமா இப்படி வாசல்லையே நிறுத்தி பேசிட்டு அனுப்பிச்சிடலாம்னு நெனைக்கறீங்களா? உள்ள கூப்பிட மாட்டீங்களா?..." என்று உள்ளே பாய ரெடியானாள் லதா.
"சாரி...சாரி...உள்ளே வாங்க. இதெல்லாம் எப்படீங்க?....சாரி...சாரி... இதெல்லாம் எப்படி லதா?.என்னவோ ரொம்ப நாள் பழகின மாதிரி...சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல. வா...வா... இப்படி வந்து ஒக்காரு...."என்று வழி விட்டாள் சாருமதி.
"அது......"என்று உரிமையோடு சோபாவில் உட்க்கார்ந்தாள்.
"மொத மொதல்ல வீட்டுக்கு வந்திருக்க என்ன சாப்பிடற..?"
"எனக்கு சூடா மட்டன் பிரியாணியும்......... சிக்கன் 65 ஒடனே வேணும்.கிடைக்குமா...? அட போங்க டாகடர்...
யாரையுமே காணாமே...தனியாவா இருக்கீங்க....? உங்க ஹஸ்பெண்ட்....."என்று இழுத்தாள்.......
"எனக்கு இன்னமும் கல்யாணம் ஆகல. அது கெடக்கட்டும் விடு...உன் வீட்டுக்காரர் என்ன செய்யறார்?.... உங்களுக்கு எந்த ஊர்?.....எத்தன குழந்தைங்க? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள் சாருமதி.
" எங்களுக்கு சொந்த ஊர் சேலம்.என் வீட்டுக்காரரும் ஒரு டாக்டர்தான். குழந்தைங்க டாகடர். லண்டன்ல இருந்து இப்பத்தான் வந்தோம்.அப்பலோ ஹாஸ்ப்பிட்டல்ல சேர்ந்திருக்கிறார். உங்களுக்கு கூட தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.அவர் பேர் Dr. சித்தார்த்தன்." என்று கூர்மையாக பார்த்தாள்.
திடுக்கிட்டு நிமிர்ந்த சாருமதி " எந்த சித்தார்த்தன்....ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ்ல படிச்சாரே அந்த சித்தார்த்தனா...?"
"ஆமா....ஆமா...அவரேதான். அவரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா......? ஆவலோடு அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் லதா.
"ஞாபகமா.....? மறந்தாதானே.ஞாபகப்படுத்தறதுக்கு. அவர் என்னோட பேட்ச் மேட்...அவரை எப்படி மறக்க முடியும்? அவர்தான் ஓன் வீட்டுக்காரரா...? நீ ரொம்ப கொடுத்துவச்சவ...ரொம்ப...ரொம்ப...அதிர்ஷடக்காரி. Such a nice Gentleman ...."என்னவோ கனவுலகில் மிதப்பதுபோல்...கண்களை முடியும்...முடாமலும்....கம்மிய குரலில்... ரகசியம் பேசும் குரலில்...."இன்னமும் தலை முடி கருப்பாத்தான் இருக்கா? இல்ல நரை.கிரை வந்துடுச்சா? கண்ணாடி போட்டுட்டாரா?"
லதா அவளையே குறு...குறுவென்று பார்த்துக்கொண்டிருந்தாள்.சாருமதிக்கு வெட்கமாய் போய்விட்டது. என்னடா இது ....என்னைக்கும் இல்லாமல்.இப்படி ஒரு கட்டுபாடில்லாம.முதல் தடவ பேசும்போதே....அதுவும் அவர் மனைவியிடமே....ச்சே... இதனை நாள் அடக்கிவெச்சதெல்லாம் மடை திறந்த வெள்ளமென கட்டுக்கடங்காமல்...
"அவருக்கென்ன .....ஆள் ஜம்முன்னுதான் இருக்கார்..."
"ஏன் உனக்கு மட்டும் என்ன லதா...? அழகா...அம்சமா...இருக்க. இந்த நீள முடியொன்னு போதுமே..அப்பா எவ்ளோ திக்கா....என் கண்ணே பட்டுடும் போல இருக்கு ....இரு...இரு...சுத்தி ஒன்னு போட்டுடுறேன்."
"சேச்சே...அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீங்க இவ்ளோ இதமா பேசறதே எனக்கு போதும்.மனசு நெறஞ்சும் சந்தோஷமாகவும் இருக்கு.ஆனா அடிக்கடி வந்து தொந்தரவு கொடுப்பேன்.ஆமா...நீங்கதான் கொஞ்சம் அடஜஸ்ட் செஞ்சிக்கணும். ஓகேவா...."
"ஆஹா ...Welcome ....Welcome .... I am waiting " ஆமா முக்கியமான ஒன்ன மறந்துட்டேனே....
கொழந்தைங்களைப்பற்றி சொல்லவேயில்லையே.....எத்தனை குழந்தைங்க?"
" அது ஒண்ணுதான் கொறச்சல்....."
" என்ன லதா இது... இப்படி சொல்ற...என்னதான் ஆச்சு?
" ஆமா டாகடர்...என்னான்னு சொல்றது. அது ஒரு பெரிய கதை...."
" இன்னுமென்ன டாகடர்?... என்னை சாருன்னே கூப்பிடலாம்..."
" இல்ல...இல்ல...என்னதான் இருந்தாலும் நீங்க பெரியவங்க.அதுமட்டும் இல்லாம டாகடர் வேற.."
" சரி....உனக்கொரு அக்கா இருந்திருந்தா...இப்படித்தான் கூப்பிடுவியா?"
"இதுக்குத்தான்...இதுக்குத்தான்....காத்துகிட்டு இருந்தேன். இனிமே உன்ன சாருன்னுதான் கூப்பிடுவேன் சரியா...? என்னவோ தெரியல சாரு...அந்த பாக்கியம் மட்டும் இன்னும் எங்களுக்கு இதுவரைக்கும் கிடைக்கல. நாங்க கொடுத்து வச்சது அவ்ளோதான். என்ன செய்யறது?. எல்லாம் என் ராசிதான்...என் விதிதான்..."
"ச்சே இது என்ன பேச்சு. இப்போ மெடிக்கல் பீல்டு எவ்ளோ முன்னேறியிருக்கு. ரெண்டு பேரும் ஒழுங்கா எல்லா டெஸ்டும் பண்ணீங்களா? Dr.சித்தார்த்தன் ஏன் இவ்வளவு அசட்டையா இருக்கார்? அவரும் டாக்ட்டர்தானே...? "
" எல்லா டெஸ்ட்டும் ஓகேதான் சாரு. ஆனா என்னவோ தெரியல.'க்ளிக்'தான் ஆக மாட்டேங்குது. சரி அது கெடக்கட்டும். உன் கதைய சொல்லு...."
" என் கதையில என்ன இருக்கு? எனக்கு அந்த ப்ராப்த்தம் இல்ல. அவ்ளோதான்... சொல்ற மாதிரி ஒன்னும் இல்ல..."
"ஏன் யாரையாவது காதலிச்சியா...?
சட்டென்று தலையை தூக்கிப் பார்த்தாள் சாருமதி.
தொடரும்.