கோபம்

நவரச குணங்களில்
"கோபம்"
என்பதும் ஒன்றுதான்..!!

"கோபம்" கொள்வதால்
நமது பிரச்சனைகள்
முற்றுப்பெறுவதில்லை...!!

மாறாக "கோபம்" கொள்வதால்
மனிதா உந்தன்
உடல் ஆரோக்கியம் சீர்கெட்டு
உறவுகள் இடையே
பகையும் வளர்ந்து
நடைமுறை வாழ்க்கையும்
அழிவை நோக்கி தான்
பயணம் செய்யும் ...!!

அப்படியென்றால்
"ரௌத்திரம் பழகு"
என்று பாரதி சொன்னது
எதற்காக .. என்றும்
மனிதன் "கோபமே"
கொள்ளக்கூடாதா
என்ற கேள்வியும்
நம்முன்னே நிற்கும் ..!!

மனிதர்களுக்கு
"கோபம்" என்பது தேவைதான்
நியாமான "கோபம்" மட்டுமே
வெற்றி பாதைக்கு வழிவகுக்கும்

தொட்டாசிணுங்கி போன்ற
"கோபங்கள்" அழிவை பாதையை
நோக்கித்தான் செல்லும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Mar-22, 10:19 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kopam
பார்வை : 1412

மேலே