பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை – அறநெறிச்சாரம் 83
இன்னிசை வெண்பா
பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை
பிறர்க்கின்னா தென்றுபே ரிட்டுத் - தனக்கின்னா
வித்து விளைத்து வினைவிளைப்பக் காண்டலிற்
பித்து முளவோ பிற. 83
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
மற்றவர்கட்குத் துன்பம் செய்தலைக் காட்டிலும் அறியாமை வேறு ஒன்று இல்லை; மற்றவர்க்குச் செய்யும் துன்பம் என்று பெயர் வைத்து, தனக்குத் துன்பத்தைப் பயிர்செய்து விளைத்து வினை கொடுக்குமாறு செய்து கொள்ளுதலைக் காட்டிலும் பிற அறியாமைதான் வேறு உண்டோ? நீயே கூறு.
குறிப்பு:
வேலிக்கிடு முள் காலுக்காம் என்பது பழமொழி.