மாடும் ஆடும் ஆடும் பாடும்

கலிவிருத்தம்

எண்ணெயை நீக்க எதையோ ஆக்கினான்
எண்ணத்தை நீக்க எதைத்தான் ஆக்கினான்
எண்ணமும் பலநாள் எண்ணெயாய் குழம்பிட
புண்ணென மனமும் சிதைந்தே வலியினால் (க)

விண்ணிலே இறைவன் வீற்றே இருந்தால்
உண்மையாய் உழைக்கும் என்னை உயர்த்தி
திண்மை உயிராய் மாற்றி துணைக்கு
ஒண்டி இருக்கும் படிசெய் திருப்பான் (உ)

இல்லை என்றே அவனை ஏசிடும்
நல்ல மனிதரை உயர்த்தி வளர்த்து
எல்லை இல்லா தீஞ்சொற் களாலே
கொல்லும் அவர்களை காப்பது ஏனோ (ங)

உழைக்க அழைத்து கொடுத்த வேலையில்
உழைத்து கிடைத்த தனத்தில் பிழைத்து
செழித்து வளர்ந்து ஓய்வால் அயர்ந்தால்
அழித்திட பிள்ளைகள் பிறப்பது சரியோ (ச)

ஓடியே நாடியே தேடியத் திரவமும்
ஆடியக் குடியுLன் கூடிய ஆட்டத்தை
நாடியக் கூட்டக் .கொலையரின் சுற்றமும்
தேடிய எதையும் வடியச் செய்தது. (ரு)

மாடும் ஆடும் ஆடும் பாடும்
ஓடும் மானாய் ஆடும் மாடும்
காடுள் இருந்தால் யாதும் மகிழ்வாய்
கோடாய் ஓடும் நீரைக் கண்டால் (சா)

எருது சிவிங்கி களிறு மானினம்
உருவில் அழகு உணவு புல்லினம்
அரிமா வரிபுலி சிறுத்தை நரியும்
பெரிதாய் வேட்டை யாடியே ஊணுண்ணும் (அ)

இரண்டையும் இனிதாய் கொய்தே சிதைத்து
திரண்ட உணவென உலையில் இட்டே
பெரிய கூட்டமாய் அமர்ந்தே உண்ணும்
அரிய அறிவு பெற்றவன் மனிதனாம். (எ)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Mar-22, 8:57 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 39

மேலே