அவள் படகு அவனோ துடுப்பாம்

நேரிசை வெண்பா

இடுப்பு இடையென்றாய் பின்னும் கொடியாம்
துடுப்புப் படகென்றாய் ஓடம் -- விடுபடு
காதல் புரியவளி டம்புலம்பு கைகூடும்
போதும் கிறுக்கல் ஒதுங்கு


காதல் வர்ணனையை காதலியிடம் நேரில் சொல்லும்-- எத்தனைபேர் எத்தனை தடவை ஒரே உளரலைக்
கொட்டிப் பிறரை சாகடிக்கிறார் . இல்லையென்றால் நண்பர்களிடம் சொல்லி தீர்த்துக் கொள்ளுங்கள்.
கிழடுகளும் உங்களைப்பார்த்து தினமும் கிறு க்குவது வேதனை. --எத்தனையோ எழுத இருக்க
அதை எழுதி தமிழ் இலக்கணம் கற்றுக்கொள்ளுங்கள். தமிழர் தமிழிலக்கணம் கற்பது மிக அவசியம்.
கிறுக்குகிறேன் என்று வரும்போதே கடவுள் பொய் என்கிறான் . பெண்ணை கொச்சை படுத்துகிறான்.
இந்த மடமையை - விட்டொழியுங்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (26-Mar-22, 2:36 pm)
பார்வை : 101

மேலே