பொள்ளாச்சியை

ஏ....பொள்ளாச்சியை
நீ சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டாய் - ரத்தச்
சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டாய்.
'அண்ணா...அண்ணா...' என்று அலறிய
அவலக்குரல் .....அபலைகளின் குரல்
நெஞ்சுக்குழியில்
ஈயத்தைப் பாய்ச்சிவிட்டது...
ஈரக்குலையில்
ஈட்டியைச் சொருகிவிட்டது.
எங்கிருந்தோ வந்த
பழைய பாடலொன்று
என் காதில் நுழைந்து
சிந்தனையை தூண்டிவிட்டது.
"பொதிய ஏத்தி வண்டியில
பொள்ளாச்சி சந்தையில
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்துப்போட்டு
பணத்தை எண்ணு செல்லக்கண்ணு.
சேத்தப் பணத்தை சிக்கனமா
செலவுபண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு.."
கனவு கலைந்தது....கண்கள் கசிந்தது
நிஜம் எரிந்தது....நினைவை எரித்தது.
அப்படி இருந்த
பொன்னு வௌயர பூமியை
பொண்ணுங்க வெளயர பூமியா ஆக்கிட்டாங்களே..!
பொள்ளாச்சி சந்தையை - இப்போ
பொல்லாத சந்தை ஆகிட்டாங்களே ...!
இதில் சேத்த பணத்த
அம்மா கையில் எங்கே கொடுப்பது?
அவங்க அத
ஆற நூறாக்குவது எங்கனம்?
அம்மா...
நீ தாய்ப்பால் கொடுத்துத்தானே
உன் பிள்ளையை வளர்த்தாய்...?
நாய்கள் நன்றியுடையதுதான் ஆனால்
வெறிநாய்கள்.....
அடித்து கொன்று போடவேண்டாமா?
விட்டால்
ஊரையே கடித்து குதறி விடுமல்லவா...?
ஏ....சமுதாயமே ...
உன்னை எண்ணி
வெட்கப்படுகிறேன்....வேதனைப்படுகிறேன்...
சிறு சந்தேகம்கூடவா தோன்றவில்லை?
எல்லாம் முடிந்தபின்...
மானம் பறந்தபின்...
கதறி என்ன பயன்...? - வழக்குகள்
போட்டு என்ன பயன்...?
வாதாடி என்ன பயன்...?
வெறி நாய்களுக்கும்...
ஓநாய்களுக்கும்...பாதுகாப்பு
கொடுத்து பாதுகாக்கும்
அதே சமுதாயம்.
வெட்கக்கேடு....
தலை குனிகிறேன்...
தவித்தும் போகிறேன்.
இனியாவது சமுதாயமே ....
விழித்து கொள்...
பொறுப்பேற்று கொள்...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-Mar-22, 12:42 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 84

மேலே