சுயம்

சுயம்.....
தானே சுயமாய் உருவாவது....
தானே சுயமாய் நினைப்பது.....
தானே சுயமாய் செயலாற்றுவது....
ஆம்.
இப்படித்தான்
என் படிப்பு சொல்லிக்கொடுத்தது.
என் அனுபவம் கற்றுத்தந்து.
என் வாழ்க்கை வாழ்ந்து காட்டியது.
ஆனால்
எனக்கொரு சந்தேகம்.
நாமே எப்படி
சுயமாக நினைப்பது?
சுயமாக உருவாக்குவது?
சுயமாக செயலாற்றுவது?
கண்ணுக்கு தெரியாத ஒருவனால்
நம் நினைவுகளில்
ஏற்கனவே விதைக்கப்பட்டதுதான்.
அது மட்டுமல்லாமல்
நம் பெற்றோர்...மனைவி...மக்கள்...
சுற்றம்...நட்பு...
இவர்களின் பங்களிப்போம் ஏராளம்.
அப்படியென்றால் சுயம்?
ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட
ஒன்றை சில...சில...மாற்றங்கள் செய்து
புதிது...புதிது...என்று மார்தட்டிக்கொள்கிறோம்.
பின் சுயம்....?
மற்றவர்கள் விட்டுச் சென்றைதைத்தான்
நாம் தொடர்கின்றோம்....
மற்றவர்கள் செய்த்தைத்தான்
நாம் உருவேற்றி...
உருமாற்றி கொண்டிருக்கிறோம்.
பின் சுயம்.....?
புரியவில்லை....
புரிந்தால் சொல்லுங்களேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (27-Mar-22, 1:04 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : suyam
பார்வை : 117

மேலே