இயற்கை
பக்கத்துக்கு வீட்டில் தானாக வளர்ந்த
தனிச்செடி அது வளர்ந்து மரமாகி
பருவம் தோறும் பூத்துகுலுங்கி
காயும் பழமும் வாரி வழங்கியது
பாவம் அந்த மரம் இத்தனை நாள்
அதன் கனியுண்டு காயுண்டு மகிழ்ந்தோர்
சிறிதேனும் ஈர தயை இன்றி
அந்த அழகு மரத்தை வேரோடு
எடுத்து வெட்டி வீழ்த்தினார் புது
மனைக்கு அஸ்திவாரம் சரியாக அமையவேண்டி
செடியிலிருந்து அந்த மரத்தை பார்த்து
மகிழ்ந்த என் கண்களில் என்னை அறியாது
கண்ணீர் வழிந்தது அர்த்தமற்ற கொடுமைக் கண்டு
'மரங்களைக் காப்போம்...மரம் நம்மைக் காக்கும்'