தனிமை
நிஜமோடு நிழலும்
பகலைத் தொடர்ந்து இரவும்
வசந்தம் பின் கோடையும்
வருவது போல வாழ்வில்
தனிமையும் வந்துருத்தும்
தனிமையும் இன்மையே
என்றெண்ணி நற்பணியில்
ஈடுபட்டால் தனிமையையும்
வென்று வாழ்ந்திடலாம்