சனியும் ஞாயிறும்
சனி ஞாயிறு விடுமுறை என்பதே கனவாகிப் போனது
உண்மையான கல்வி தொடங்கியதிலிருந்து...
ஞாயிறு ஒரு நாள் விடுமுறை என்று கூறிவிட்டு
வீட்டுப் பாடங்கள் ஏதும் கூறுவதில்லை
இரு மாதங்களாய்...
ஒரு நாள் தானே லீவு
ஏன் 2 Homework தாரீங்க sir
கொஞ்சம் ஜாலியா
விடுங்க Please என்று ஒரு மாணவன்
கூறியது மனதிற்குள் ஓர் ஆணி அடித்தது போல் இருந்தது...
வாரம் 6 நாட்கள் என்பது
மாணவர்களுக்கு
மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் சுமை தான் ....
பல நாள் பட்டினி கிடந்தவன்
என்பதால்
மொத்தமாக திணிக்க முடியாது அல்லவா ..
வாரத்தின் 5 நாட்கள் வகுப்பறையின் இரைச்சலிலும்,
கோஷங்களிலும் இருப்பது என்பது
மூளைக்குள்
பல டிஜிட்டல் எபெக்ட்களில்
படம் போல் நச்சரிக்கும்...
ஓரிரு நாட்கள் சத்தத்திலிருந்து
ஓய்வு கொடுத்தால் மட்டுமே
மூளை ஆற்றலுடன் செயல்பட முடியும் என்பது
உளவியல் உண்மையும் கூட,
இத்தனை பிரச்சனைகக்கு இடையில் கால நேரங்கள் தெரியாத
எமிஸ் என்னும் வேதாளத்திற்கு கட்டாய பதில் சொல்ல வேண்டிய
விக்ரமாதித்தர்கள் ஆசிரியர்கள் ...
அவர்களின் ஒரே ஆறுதல் சனியும் ஞாயிறும்
அதனைப் பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
அதிகார அரசாங்கம் ,,,
வெள்ளிக்கிழமைகளில்
இசையாய் ஒலித்த மணியோசை
இயல்பாய் மாறிப்போனது
காலத்தின் கொடுமை ..
பெண்களுக்கு ஞாயிறும் விடுமுறை
பட்டியலில் இல்லை என்பது
நாம் அறிந்ததே...
நீண்ட தேடலுக்கு பின் பொக்கிஷம் போல் வந்தது
யுகாதி விடுமுறையுடன் சேர்ந்த ஒரு ஞாயிறு
நன்றி யுகாதி
அன்புடன் ஆர்கே ..