உங்களுக்கான வாய்ப்புகள்

வாய்ப்புகள்..

வரிசையாக வருகின்றன
வாய்ப்புகள் !

வாயிற் கதவைத்
தட்டும்போதே
வளைத்துப் போடுவோம் !

இன்றைக்கு
நம் கரம் குலுக்க
நீட்டும் கரங்களை
அசட்டை செய்தால்

நாளை
நாம் தேடி
அலைய நேரிடலம் !

கொஞ்சம்
விடியலில் எழுந்து

உள்ளத்தையும் இல்லத்தையும்
திறந்து வைப்போம்

வருகின்ற
வாய்ப்புகளை
வரவேற்க !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (1-Apr-22, 9:46 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 582

மேலே