கதவு மனக்கதவு

கதவு ; மனக்கதவு;
 
களவை தடுப்பது கதவு;
கலைகட்டி அழகாய் நிற்பது நிலைக்கதவு;
கள்ளம் கபடு அற்றது  மனக்கதவு;
கன்னியமான வாழக்கைக்குத் தேவை மனக்கதவு;
 
கட்டிடங்கள் விண்ணைத் தொட்டாலும்;
நுழைவாயில்  என்னவோ நுழையும் அளவுதான்;
கவலைகளும் கஷ்டங்கள் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும்,
சோகத்தின் அளவு வடிக்கும் கண்ணீரின்; அளவுதான்;
 
கதவைக் திறக்க தேவை சாவி;
மனக்கதவை திறக்க தேவை நம்பிக்கை என்னும் சாவி;
 
திசையைப் பார்த்து நிற்பது  நிலைக் கதவு
திசையே பார்க்காதது மனக்கதவு;
 
உடைந்த கதவு ஊளை இடும்;
உடைந்த மனது ஓளமிடும்;
 
மூடியகதவைத் திறப்பது திறவுகோல்;
மூடநம்பிக்கையிலிந்து விடுபட உனக்கு தேவை;
பகுத்தறிவு என்னும் திறவுகோல்;
 
மூடாத கதவு தேடாமல்வரும்  இடர்பாடு;
மூடாதமனது  முழுவதும் நிறைந்து கிடக்கும் நினைவும் துயரும்;
 
விடாமுயற்சி வெற்றியின் திறவுகோல்;
வெறும் பிடிவாதம் தாழிட்ட மனக்கதவு;
விரக்தியே குடிகொண்டிருக்கும் மனவாசம்;
 
திறக்காத கதவு, திருடனுக்கும் உதவாத சிக்கிய கதவு;
உடைத்தால் தான் கிடைக்கும் உனக்கு வழி;
மனக்கதவை உடைக்காதே
மனதில் கிடக்கும் சோகத்தை விரட்ட மனக்கதவை திறந்து விடு;
 
நல்ல காற்று புகும் தலைவாசலாய்
நல்ல எண்ணங்கள் வந்தே மனதை வருடட்டும்;
 
வாய்ப்பு உன் வாசல் கதவை தட்டி வருவது கிடையாது;
வெற்றிக்கதவு திறக்க வேர்வை சிந்திப்பார்;
 
கதவாய் இருந்துவிடு, கடமையை செய்து விடு;
நிலையாய் இருந்து விடு, நிலைத்து நின்று விடு;
அன்பே இதயத்திறவுகோல்;
பன்பே மௌனத்திறவுகோல்;
 
இதயக்கதவு திறக்கட்டும்;
இரக்கத்துடன் கருணை சுரக்கட்டும்;
கதவாய் மனம் நிற்கட்டும்;
கடும் சொற்கள்  பேசாது,  தவறான செயல்கள் செய்யாது இருக்க
மனக்கதவு மூடட்டும்.
 
தாழிட்ட கதவு, தட்டினால் மட்டும்  தான் திறக்கும்;
தடுமாற்றம், தரும் உனக்கு ஏமாற்றம்;
தட்டி தட்டி பார் மனக்கதவு திறக்கும்;
விடியலை சுமந்து பார்; வெற்றி கதவு திறக்கும்;
விடியலும் ஒரு கதவுதான்
இரவை விரட்டி உதயத்திற்கு விழிவடும் புவியின் காலைக் கதவுதான்;
 
மனக்கதவை திறப்போம்;
மனக்கசப்பிலிருந்து விடுபடுவோம்
அன்பை சுமப்போம் இல்லத்திலும் உள்ளத்திலும்
மகிச்சியை  மனையிலும் மனதிலும் நிறப்புவோம்
மாற்றத்தை ஏற்போம்;
தடுமாற்றத்தை தடுப்போம்.
 

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (5-Apr-22, 9:50 am)
பார்வை : 145

மேலே