முன்னேறிச் செல்

எங்கும் தேங்கி விடாமல்
ஓடிக் கொண்டேயிரு
பாடம் சொன்னது நதி

யாருக்காகவும் எதற்காகவும்
காத்திருக்காதே புரிதல் தந்தது
கடிகாரமுள்

எப்படி பார்த்தாலும்
பாடம் என்னவோ
ஒன்று தான்

வாழ்க்கையை மற்றவருக்காக
வீணடிக்காமல்
முன்னேறிச் செல்....

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (5-Apr-22, 5:30 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 176

மேலே