பல்லி விழுந்த உணவாய்

வியாபாரம் என்பதே விலையால் விளையாடும் விளையாட்டு
தயாராய் இருப்பார் வாங்க வருவோரை தாக்கிட
நியாயம் பேசியே மயங்க வைத்து பொய்யால்
தயாளனாய் தன்னைக் காட்டிடும் மாமனிதன் வியாபாரியே.

ஊரினுள் உள்ள வியாபார கடைகள் எல்லாமும்
நேரிடை கொள்முதல் செய்வதாய் பொய்யை சொல்லியே
ஊருக்கு ஒவ்வொரு விலையை வைத்து
ஒருவரே
காரிருள் விற்பனை செய்வதே நவீன ஏமாற்று.

உணவையும் நீரையும் மிகுதி விலையில் விற்று
ஈட்டிடும் பணத்தை கிரியில் உறையும் இறைவனின்
உண்டியில் இட்டே உன்னத உணர்வை பெறுவார்
அண்டி வாழ்ந்திடும் ஊழியர் வாடிட ஏசுவார்

வாசனை துகளால் நிரம்புமே வியாபா ரத்தளம்
நினைக்க இயலா நிலையில் இருக்கும் விலைகள்
குறைத்துக் கேட்டால் குரைப்பர் ஞமலிப் போலவே
அருமையாய் ஓதுவார் இறைவனைப் போற்றிடும் பாடலை

எல்லை இல்லா துர்புத் தியினால் கெடுதலும்
மெல்லமாய் வெளிவரும் கூர்ந்தே நோக்கிடின் தெரியும்
வெல்லமாய் பேசிய பேச்சுகள் பொய்யாய் மறையும்
பல்லி விழுந்த உணவாய் எல்லாம் நஞ்சென I
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (12-Apr-22, 3:40 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 28

மேலே