காலை கடன் முடிக்க....

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

*எத்தனை எத்தனை....*.

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

இணையத்தின் மூலம்
அமெரிக்காவை
பார்க்க முடிகின்ற
காலம் வந்துவிட்டதென்று
கை தட்டுகிறோம் ....
இன்னும்
மின்சாரத்தையே
பார்க்காத
கிராமங்கள் தான்
எத்தனை எத்தனை ......!!!

குளிப்பாட்டிவிட
இயந்திரம் வந்துவிட்டது என்று
பெருமையாகச்
சொல்கிறோம்....
இன்னும்
காலை கடன் முடிக்க
இரவுக்காக
காத்திருக்கும்
பெண்கள் தான்
எத்தனை எத்தனை.....|

செயற்கைக்கோளை
பூமியின் சுற்றுப் பாதையில்
வெற்றிகரமாக
நிலை நிறுத்தப்பட்டதற்கு
கைத்தட்டுகிறோம்....
இன்னும்
பூமியில் நடந்து செல்ல
சரியான பாதை இல்லாமல்
கஷ்டப்படும் ஊர்கள் தான்
எத்தனை எத்தனை....!

செத்தவர்களுக்கு
மணிமண்டபம்
நினைவிடம்
சிலை என ஆடம்பர விழா
எடுக்கிறோம்....
இன்னும்
ஒரு வேளை
உணவு இல்லாமல்
செத்துக் கொண்டிருக்கும்
உயிர்கள் தான்
எத்தனை எத்தனை... !

நிலவில் நீர் இருக்கிறதா? என்ற ஆராய்ச்சி செய்கிறோம்
தண்ணீர் இல்லாமல்
காய்ந்து கிடக்கும்
வீட்டுக் குடங்கள் தான்
எத்தனை எத்தனை.....

செவ்வாய் கோளில்
மனிதன்
வாழ முடியுமா என்று
ஆராய்ச்சி செய்ய
ஆசைப்படுகிறோம்....
ஆனால்
வாழ்கின்ற பூமியில்
குடியிருக்க
வீடு இல்லாமல்
மரத்தடியிலும்
நடைபாதைகளிலும்
மேம்பாலத்தின் அடியிலும்
வாழ்கின்ற மக்கள் தான்
எத்தனை எத்தனை.....!

அனைத்து மக்களுக்கும்
முதலில்
அடிப்படை வசதிகளை
செய்து கொடுப்போம்....!
அப்புறம்
ஆடம்பரத்தை பற்றி
பேசுவோம்......!


*கவிதை ரசிகன்*

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

எழுதியவர் : கவிதை ரசிகன் (11-Apr-22, 10:29 pm)
பார்வை : 44

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே