தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
சித்திரைத் திருநாள்
நல்வாழ்த்துகள் !!!
---------
மகிழ்ச்சிகளை சுமந்துவரும்
சித்திரை ! - பெரும்
புகழ்ச்சியெலாம் பொங்கவிடும்
சித்திரை !
கனிகாணும் போதினிலே
நம்பிக்கை ! -இன்று
கனிந்திடுமே காலம்-இனி
நம்கையில் !
புத்தாண்டைக் கொடுத்ததிந்தச்
சித்திரை ! -நல்ல
புதுவாய்ப்பில் வென்றிடுவோம்
இத்தரை !
முயற்சிகளை முன்னெடுப்போம்
இத்தினம் ! -நாம்
உயர்வதற்கே உதித்ததிந்த
இரத்தினம் !
வாழ்த்திடுவோம் வாழ்க! என
மகிழ்வொடு ! -நாமும்
வாழ்ந்திடுவோம் தலைநிமிர்ந்து
தமிழொடு !!!
-யாதுமறியான்.