நீ திரும்பிநடந்து.......
நீ திரும்பிநடந்து
திரும்பி பார்க்கையில்,
நான் தெருவெங்கும்
தொலைந்துபோகிறேன் .
மரம் உதிர்த்த இலைகள்போல்,
என்னை உதிர்த்துவிட்டு போவதேன்?
சுகமான கீதம் பாடவா?
சொந்தபந்தம் தேடவா?
சொற்பநேரம் இருந்தது இதுவரை
நீ சென்றாய் அதுவும் தொலைந்தது.