தீதும் நன்றும் பிறர் தர வாரா ..
மனதோடு நீ விதைத்த
ரணங்கள் தான்
சிகரமேற எனக்கு ஆதாரமாய்.. !
வாழ்வோடு
நீ குத்தி சென்ற
முட்கள் தான்...
என் வீட்டு பூக்கள்
நிறம் மாற காரணமாய்....!
நீ கொடுத்து சென்ற
வார்த்தைகள் தான்
இங்கு கவி வரைய காரணமாய்.....!
. கதேலேனும் சிறகை
நீ முறித்த பிறகே...... ..
முரண்பாடாய்
வானம் வரை பறக்க எத்தனித்தேன்...!
.நேசமெனும் கனவை
நீ சிதைத்த பிறகே
எதிர்மறையாய்..
.
விருட்சதிற்காக விதைக்க துணிந்தேன்..!
நீயின்றி அணுவும் அசையாது
என்றிருந்தேன்.....!.
இன்று உன் நிழல்
கடந்த பின்தான்
நிஜமாய் வாழ துடிக்கிறேன் ....!
பழி வாங்க நீ தந்த
தோல்வி தான் என் பாலமானது....
தீதும் நன்றும் பிறர் தர வாரா
இதுவே என் வேதமானது . ...!