தமிழ்ப் புத்தாண்டு

எம்மொழி வந்தாலும்
செம்மொழித் தமிழ் போல
செழுமை தரும் மொழியுண்டோ?
தமிழ் அல்லாத மொழி கற்பினும்
தமிழ் தந்த தாலாட்டின் களிப்புண்டோ?

கொஞ்சும் தமிழோடு
நெஞ்சில் மகிழ்வோடு
வாழ்த்தி வரவேற்போம்
நற்செய்கை புத்தாண்டை...
(சுபகிருது-சமஸ்கிருதம்)

வழக்கங்களுக்கு வைப்போம் வரைமுறை,
வளமோடு நலமோடு வளரட்டும் தலைமுறை...

எம்மொழிக் கற்றாலும் தொய்வுண்டாம்
தொய்வில்லை
தாய்த்(தமிழ்) மொழி கற்றவர்க்கு

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...!
தமிழினிது பாலகுமார்

எழுதியவர் : பாலகுமார் (14-Apr-22, 12:17 pm)
சேர்த்தது : பாலகுமார்
Tanglish : TAMILP puthandu
பார்வை : 57

சிறந்த கவிதைகள்

மேலே