தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரைப் பூவாய் மலர்ந்த முகம்கொண்டு
சிரிப்போடு சிவந்தவளாய் வருகின்றாள்
சித்திரைப் பெண் சுபக்ருதி எங்கும்
மங்களம் பொங்கிடவே தீய சூனியன்கள்
சூரியனைக் கண்டு விலகும் பனிபோல்
இனி இவ்வாண்டு முழுவதும் சுபம் சுபமே
திக்கெல்லாம் நோயில்லா வாழ்க்கையின் குதுகூலம்
எல்லாரும் எல்லாம் நல்லவை எல்லாம்
பெற்று இன்புற்று வாழ்ந்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Apr-22, 1:03 pm)
பார்வை : 53

மேலே