கண்ணே! உந்தன் காதலில்
💝❤🩹💝❤🩹💝❤🩹💝❤🩹💝❤🩹💝
*கலிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
❤🩹❤🔥❤🩹❤🔥❤🩹❤🔥❤🩹❤🔥❤🩹❤🔥❤🩹
கண்ணே !
உந்தன் காதலில்
கல்லும் மண்ணும்
கவிதையாகுதே...!
பூவே !
உந்தன் அழகினிலே
உடலும் உயிரும்
உருகுதே ....!
மழையாய் மாறி
உன்மேல் பொழிந்திடவே
மனசுக்குள்
ஆசை பிறக்குதே ....!
பறவையாய் மாறி
பறந்திடவே
இதயம் அனுமதி
கேட்கிறதே .....!
சிலையாய்
உன்னை செதுக்கினால்
சிற்பியின் கையில்
உளியாவேன் .....!
சித்திரமாய்
உன்னை திட்டினால்
ஓவியன் கையில்
தூரிகையாவேன்....!
உந்தன்
சிரிப்பின் அழகினிலே
எந்தன்
சிரிப்பைத் தொலைத்தேனே...!
உந்தன்
இதய அழகினிலே
எந்தன் இதயத்தை
இழந்தேனே ......!!
முள் பட்டு
ரத்தம் கசிந்தாலும்
உன் ஞாபகம் போகலையே
கை பட்டு
கண்ணீர் வடிந்தாலும்
உன் முகம் மட்டும்
மறையலையே...!
தவம் செய்யாமலே
நான் பெற்ற வரம்
நீ தானடி..
கடலில் மூழ்காமலே
நான் எடுத்து முத்து
நீ தானடி......!
உணவின்றி
உயிர் வாழ்ந்தாலும்
உன் நினைவின்றி
என்னுயிர் வாழாதே...!
நீர் இன்றி
நான் வாழ்ந்தாலும்
நீ இன்றி வாழ மாட்டேன்....!
*கவிதை ரசிகன்*
❤🔥❤🩹❤🔥❤🩹❤🔥❤🩹❤🔥❤🩹❤🔥❤🩹❤🔥