வார்குழலார் நச்சினும் நையாமை - சிறுபஞ்ச மூலம் 18

நேரிசை வெண்பா

பொய்யாமை பொன்பெறினுங் கள்ளாமை மெல்லியலார்
வையாமை வார்குழலார் நச்சினு - நையாமை
யோர்த்துடம்பு பேருமென் றூனவா யுண்ணோனேற்
பேர்த்துடம்பு கோடல் அரிது. 18

- சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பொற்காசுகள் பெறுவதாயினும் ஒருவன் பொய் சொல்லக் கூடாது.

பிறர் பொருளைக் களவு செய்யலாகாது.

தம்மினும் மெல்லிய தன்மையை உடைய எளியவரை திட்டலாகாது.

நீண்ட கூந்தலையுடைய பெண்கள் விரும்பித் தொல்லை செய்தாலும் உளந்தளர்ந்து இணங்கக் கூடாது.

மேற்கொண்டு, தன்னுடம்பு மெலியுமென்று எண்ணி அதைக் காப்பதற்கு மற்றவொரு உடம்பின் கறியை விரும்பி ஒருவன் உண்ணாமல் இருந்தால், அவன் மீண்டும் மற்றொரு உடம்பைக் கொல்ல வேண்டியது இல்லை.

நச்சுதல்
To desire, long for, like, love; விரும்புதல். ஒருவரா னச்சப் படாஅ தவன் (குறள், 1004).
நை. To babble, prate; அலுப்புதல். சதா நச்சிக் கொண்டிருக்கிறான்.
To tease, vex, trouble, harass; தொந்தரை செய்தல். சதா என்னை நச்சாதே.

கள்ளல் - பிறர்பொருளை வஞ்சித்துக் கொள்ளுதல், மெல்லியலார் - பொருளில்லாமையால் மெலிந்திருப்பவர்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Apr-22, 6:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே