வளர்ப்போம்
"மரம் வளர்ப்போம் தம்பி!
மரம் வளர்ப்போம்!
வீட்டுக்கு ஒரு மரம்
வளர்ப்போம்,
நம் நாட்டுக்கு
இயற்கை வளம்
சேர்ப்போம் தம்பி!
மண்ணில் வளரும்
மரத்தை,
கண்ணில் வைத்து
காத்திட்டால்,
அது பொன்னிலும்
இல்லா பலன்
தரும் தம்பி!
அந்த விண்ணும்
மழையை பொழிந்திடும்
தம்பி!
வாழ்வில் 'அறமும்',
நிலத்தில் 'மரமும்',
அவசியம் இருக்கணும்
தம்பி!"
எடுப்போம் மரக்கன்றை
கையில் ,
சேர்ப்போம் வளந்தனை
வாழ்க்கையில்."