ஒரு celebrity ன் கதை

ஹாய் ஹலோ அண்ட் வெல்கம் டூ தினம் ஒரு celebrity ஷோ. இன்னைக்கு ஷோல நாம பார்க்க இருக்குற celebrity மீடியாவ மாஸ் மீடியாவா மாத்தி கலக்கிட்டு இருக்குற மாறன்.சாதாரண மாறன் இல்ல மீடியா மாறன்னு சொன்னா தான் பலருக்கும் தெரியும். இப்போ அவர்கிட்ட தான் பேச போறோம்.
கேமரா ரோலிங் ....ம்ம்ம் டேக் ஓகே வா
ம்ம்ம்ம் மாறன் இப்போ நீங்க நடந்து வர மாதிரி , பெஞ்ச் ல உக்கந்துருக்குற மாதிரி சில ஷாட்ஸ் எடுத்துக்குவோம்.அப்புறம் வாக்கிங்ல பேசிட்டே இன்டெர்வியூ எடுத்துக்கலாம்னு ஆங்கர் மாறனுக்கு சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க.
மாறன் ஆமா பத்திரிகை பேட்டி , சினிமா பேட்டி , அரசியல் பேட்டி எடுத்த ஜர்னலிஸ்ட் மாறன். இப்போ ஒரு celebrity ஆக பேட்டி கொடுக்க போறோம்னு ஒரு பதட்டத்துல அங்க இங்க பரபரப்பா பார்க் ல சுத்திட்டு இருக்கான்.
மாறன் வயசு 30 முன்னணி ஊடகத்துல சீனியர் சப் எடிட்டர், மனைவி இரண்டு குழந்தையோட வாழ்க்கைய நடத்துற ஒரு மிடில் கிளாஸ். என்னடா மீடியால வேலை பார்த்துட்டு மிடில் கிளாஸ்னு சொல்றானேன்னு பார்க்குறீங்களா ? மீடியால வேலை பார்க்குறவங்க லட்சகணக்குல சம்பளம் வாங்குவாங்கனு கோ ,கவண் இப்படி சினிமாவுல மிகைப்படுத்தி சொல்லிருப்பாங்க.
ஆனா உண்மை என்னனா , சாதாரண பின்புலத்துல இருந்து மீடியாக்குள்ள போறவங்களுக்கு பரதேசி படம் மாதிரி தான் இருக்கும்.
மாறன் படிச்சதுக்கும் இப்போ வேலை செய்யுறதுக்கும் சம்பந்தம் இல்லை, ஆனா ஏதோ ஒரு இடத்துல இருந்து தான் இந்த விஷயம் தீவிரமடைந்து இருக்குது.
நேர்காணல் ஆரம்பிக்குது....
வணக்கம் என் பேர் மாறன். ஊடகவியலாளரா பணி புரிந்து கொண்டிருக்கிறேன்.நான் பல பேர பேட்டி எடுத்துருக்கேன்,ஆனா இப்போ நான் ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுக்குறது இது தான் முதல் முறை...
மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளை வஞ்சித்து கொண்டு ....
ஆங்கர் குறுக்கிட்டு சர் சர். . . இதுல உங்க பாலிடிக்ஸ் இன்டர்வியூ இல்ல, கொஞ்சம் ரிலாக்ஸா பேசுங்க
ம்ம்ம் .. சரி சொல்லுங்க எப்படி இருக்கீங்க
நீங்க தப்பா நெனக்கலைனா நான் ஒன்னு சொல்றேன், நீங்க தொடர்ந்து என்னோட சமூக வலைதளத்துல என்ன follow பண்றீங்க , நேத்து போன் பண்ணி டைம் கேட்டீங்க நானும் சொன்னேன். இங்க வந்து பார்த்தும் பேசியாச்சு, அதாவது எப்படி பேச்சை ஆரம்பிக்கிறதுக்குனு எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இதுலாம் கொஞ்சம் க்லீசே மாதிரி இருக்கு.நீங்க வேற எதாவது கேளுங்க.
நாம எதுவும் தப்பா கேக்கலையே ஆங்கர் கேமரா மேன பார்க்க அவரு இவங்கள பார்க்க சரி இன்னைக்கு என்னமோ நடக்க இருக்குனு ரெண்டு பேரும் மைன்ட் வாய்ஸ்ல பேசிட்டு கேக்க ஆரம்பிச்சாங்க ....
இந்த ஊடகத்துறைக்கு நீங்க எப்படி வந்தீங்க... அதாவது முதல் அனுபவம் குறித்து சொல்லுங்க
மாறனுக்கு இந்த கேள்வி கேட்கும் போது நினைவுகள ஓட விட்டு அந்த சம்பவத்தை தேடிட்டு இருக்கான். ம்ம்ம் முதல் அனுபவமே முரட்டு அனுபவம்னு தன்னோட கதைய ஆரம்பிச்சான்.
எனக்கு நெறய துறையில வேலை பார்த்த அனுபவம், காரணம் மூணு மாசத்துக்கு மேல நான் ஒரு கம்பெனில வேலை பார்த்தது கிடையாது. அப்படி இருக்க செய்தி தான் வாசிப்பு பழக்கம் ,நியுஸ் பார்க்குறது அப்போ தந்தி டிவில விவாத மேடை இது எல்லாம் பார்த்துட்டு நாமளும் பேசுறோம். மீடியால வேலை தேடி பார்ப்போம்னு கூகிள்ல தேடி ஒரு பத்திரிகை கிடைக்கது.
அதாவது பத்திரிகை குறித்து முன் பின் அனுபவம் எதுவும் இல்லாமல் வேலை தேடி நம்பர் எடுத்து பேசி நேரடியா போயிட்டேன். ஆபீஸ் இன்டர்வியூக்கு போறோம் பைல் எல்லாம் எடுத்துட்டு, டக்கின் பண்ணிட்டு எங்க அம்மா கிட்ட திட்டு வாங்கி கிட்டே பஸ்க்கு இருபது ரூபா வாங்கிட்டு கிளம்புனேன்.
இந்த இடத்துல எங்க அம்மா பத்தி சொல்லி ஆகனும் புதுப்பேட்டை படத்துல தனுஷ் சொல்ற மாதிரி எங்க அம்மா எனக்கு ரொம்ப புடிக்கும். நான் எதாவது ஒரு நல்ல வேலைக்கு போகணும்னு சொல்லகூடாத கஷ்டம் எல்லாம் பட்டாங்க, அவங்க பூ கட்டி வியாபாரம் பார்ப்பாங்க. அப்டி பூ கட்டுறதுனால கைக்கு இடையில புண் வந்துரும், இப்படி பூ கட்டி வித்தா ஒரு 200, 300 கிடைக்கும்.
ஆனா அவங்கனால ரொம்ப தூரம் நடக்க முடியல, ஆனா நான் வேலைக்கு போற வரைக்கும் குடும்பத்து வருமானத்துக்கு என்ன பண்றது நான் ,எங்க அம்மா, அப்பா, அம்மாயி, எல்லாரும் கூலி வேலை தான் பார்க்குறாங்க. அதுனால சேட்டு வீட்டு கல்யாண வேலைக்கு சமையல் உதவிக்கு எங்க அம்மாவும் ,அம்மாயியும் போவாங்க. ரொம்ப நேரம் தண்ணியில நின்னு பாத்திரம் வெளக்குறது, அந்த கெமிக்கல் சோப் ஆயில் இதுனால கை,கால் ரொம்ப எரியும். இப்டி பார்த்தா தான் 250 கிடைக்கும்.
இது எல்லாத்தையும் நான் கூட இருந்து பார்த்து வளர்ந்ததுனால நாம இந்த சமூகத்துல ஒரு இடத்துக்கு வந்து இது தான் எங்க அம்மானு அவங்க பெருமை படுற அளவுக்கு ஒரு வேலை பார்க்கனும்னு மீடியா துறை தேர்ந்தெடுத்து அந்த இன்டர்வியுக்கு போனேன்.
இன்டர்வியுக்கு வர சொல்லி கூப்பிட்ட அந்த நம்பருக்கு திரும்ப கால் பண்ணி எங்க வரணும்னு கேட்டேன்.இந்த மாதிரி ரவுண்டான டீக்கடை பக்கத்துல வந்துருங்க தம்பினு சொல்லிட்டு கால் கட் ஆகிடுச்சு, ஆபீஸ் அட்ரஸ் கேட்டா டீக்கடைக்கு வர சொல்றங்கனு நானும் அங்க போயி வெயிட் பண்ணிட்டு இருந்தேன். காயிலாங்கடையில இருந்து எடுத்துட்டு வந்த மாதிரி ஒரு வண்டில ஒருத்தர் வந்து நின்னுட்டு தம்பி நீங்க தான வேலை கேட்டு வந்தது. ஆமா சார் நான் தான் my name is maaran, I am completed bsc . I am very much interested to work on media . தம்பி தம்பி பொறுமையா இருங்க பைக்ல ஏறுங்க போயிட்டே பேசுவோம். சரின்னு வண்டியிலே ஏறிட்டேன், ரெண்டு பேரும் சம்பந்தம் இல்லாம ..இல்ல எனக்கு சம்பந்தம் இல்லாம ஸ்கூல் ஸ்கூலா போயிட்டு வந்துட்டு மதியம் நேரத்துல மறுபடியும் ஒரு டீக்கடையில நிப்பாட்டிட்டு ரெண்டு பேரும் டீ குடிச்சோம். அப்போ தான் அவரோட பத்திரிகை அனுபவத்தை பத்தி பேச ஆரம்பிச்சாரு.
நான் நக்கீரன் பத்திரிகைல வேலை பார்த்துட்டு இருந்தேன்னு வீரப்பன் போட்டோ வந்த கதைய சொல்லிட்டு இருந்தாரு. ஏன்னா வீரப்பன முதல் போட்டோ எடுத்து கொடுத்தது சிவசுப்ரமணியன்னு ஒரு பத்திரிகையாளர். நான் தான் தம்பி போட்டோ எடுத்து கொடுத்தேன் ஆனா அது வேற மாதிரி மாறிடுச்சுனு சொல்லிட்டு உருட்டிட்டு இருந்தாரு.
நானும் ச்ச என்னா மனுசன்யானு நெனச்சுட்டு குடும்பத்தை பத்தி சொல்லிட்டு இருந்தேன். அப்புறம் தான் நானு மெல்ல கேட்டேன் இந்த வேலை, அதுலாம் ஒன்னும் பிரச்னை இல்ல தம்பிநு சொல்லிகிட்டே சிகரெட்ட பத்தவச்சாரு. அது ஒண்ணுமில்ல தம்பி டெபாசிட் தொகை மட்டும் ஒரு மூவாயிரம் கட்டிருங்க ஐடி கார்டு எல்லாமே கொடுத்துறேன்னு சொன்னாரு எனக்கு பக்குன்னு ஆச்சு.
சம்பளம் பத்தி எதுவும் பேசமா நான் வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அப்புறம் எங்க வீட்டுல பையன் பாண்டே மாதிரி ஹரிஹரன் மாதிரி பெரிய ஆள் ஆகி டிவி வருவான்னு(அப்போ எங்க வீட்டுல தந்தி டிவி தான் அதிகமா பார்ப்பாங்க)தவணைக்கு காசு வாங்கி கொடுத்தாங்க. நானும் போன் பண்ணி சார் டெபாசிட் காசு ரெடி பணிட்டேன் ஆபீஸ் அட்ரஸ் சொல்லுங்க வரேன்னு கேட்டேன். தம்பி அன்னைக்கு வந்த அதே ரவுண்டானா டீக்கடைக்கு வந்துட்டு கால் பண்ணு அட்ரஸ் சொல்றேன்னு சொல்லிடாரு, நானு அங்க போய்ட்டு அட்ரஸ் விசாரிச்சு போனேன்.
அங்க பார்த்தா அவர் வீட தான் ஆபீசா மாத்தி வச்சுருகாரு, டைட்டில் மட்டும் லைசென்ஸ் வாங்கி வச்சுருகாரு இனிமேல் தான் ஆரம்பிக்கபோறோம்,நீங்க மதுரை மாவட்ட நிருபர்னு சொல்லி ஐடி கார்டு போட்டு கொடுத்தாரு. இணையதளத்துல செய்திய கொண்டு போய் சேர்க்க போறோம், பேப்பர் ஆரம்பிக்கிறோம்னு, டெய்லி அவர் வீட்டுக்கு போக வேலை என்னாச்சுனு கேக்க அவர் சம்பந்தம் இல்லாம அவரோட கதைய சொல்ல இப்படியே இரண்டு மாசம் ஓடிருச்சு.
வீட்டுல சம்பளம் கேக்குறாங்க சார்னு போய் கேட்டேன் ஆமா வீட்டுல சம்பளம் கேக்க தான செய்வாங்க. சார் அத தான் நான் உங்க கிட்ட கேக்குறேன் , சம்பளம் எங்க. தம்பி நாம இன்னும் பத்திரிகையே ஆரம்பிக்கல அதுக்குள்ளே எப்படிப்பா சம்பளம், நான் ஒரு ஐடியா சொல்றேன். நாம ஸ்கூல்ல போய் மெடிக்கல் கேம்ப் பேசுனோம் நியாபகம் இருக்கா?, அதே மாதிரி நீயும் பண்ணு வர காசுல ஆளுக்கு பாதி பாதி எடுத்துக்கிறுவோம்னு சொன்னாரு.
சரின்னு இந்த ஊருல வேணாம் தம்பி கோயம்புத்தூர்ல போய் பண்ணுங்கனு சொல்ல நானும் கெளம்பி அங்க போய் தங்க இடம் இல்லாம ரயில்வே பிளாட் பாரம் , அம்மா உணவகம் சாப்பாடுன்னு சாப்ட்டு பதினைந்து நாள் கழிச்சு ஒரு கேம்ப் பண்ணி கொடுத்தேன். ஐயாயிரம் வந்துச்சு, அவரு ரூம் வாடகை வண்டிக்கு பெட்ரோல்னு எல்லாத்தையும் எடுத்துட்டு 500 ரூவா கொடுத்தாரு. என்னங்க இதுனு இருக்குற காச வச்சுட்டு ஊரு போய் சேருவோம்னு கெளம்பி ஊருக்கு வந்துட்டு நேருல போய் பார்க்க வீட்டுக்கு போனா , வீட்டுல இருந்துகிட்டே அவரு பொண்டாட்டிய விட்டே இல்லைன்னு சொல்ல சொல்றதுன்னு அந்த ஆளு கண்ணுல படவே இல்ல. பத்திரிகையும் ஆரம்பிக்கல டெபாசிட் காசும் திரும்ப கொடுக்கல , அதுக்கு பிறகு தான் முகநூல் வட்டாரத்துல பழக்கம் அதிகரிக்க இப்படி எல்லாம் எங்கயும் கேட்க மாட்டாங்க.
பத்திரிகைக்கு அனுமதி வாங்குறது ரொம்ப ஈசியா இருக்குறதுனால பல பேர் இப்படி கெளம்பிட்டாங்க. இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்ததானு எனக்கு தெரியல
ஆனா என்னோட முதல் அனுபவமே இப்படி ஏமாற்றம்னு ஆரம்பிச்ச பின்னாடி தான், இதுல இருக்குற தகிடுதத்தம் எல்லாத்தையும் நான் தெரிஞ்சு கிட்டேன். அப்புறம் வேலை தேடிய போதுஅரசு அட்டைக்கு 2500,5000,10,000 ரேட் பேச ஆரம்பிச்சாங்க.சம்பளம் கிடையாது.ஒன்லி விளம்பர கமிஷன் மட்டும் தான்.
அப்புறம் எப்டி சார் நீங்க பத்திரிகை துறையில இருந்து ஊடகத்துறைக்கு வந்தீங்கனு ஆங்கர் கேட்க ஆரம்பிச்சாங்க.
இப்படி ஒரு ஏமாற்றம் எங்க வீட்டுல மீடியா மேல ஒரு பெரிய பயத்தை உருவாக்குச்சு. அதுக்கப்றம் இரண்டு வருஷம் கழிச்சு தான் திரும்ப பத்திரிகை பக்கம் வேலை தேட ஆரம்பிச்சு ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஒரு பத்திரிகை அலுவலகத்துல வேலைக்கு சேர்ந்தேன். செய்தி சேகரிக்க போனேன் ,பேப்பர் போட்டேன் , செய்தி எழுத ஆரம்பிச்சேன், செய்தி எழுதுறது கட்டுரையாக மாறுச்சு.
அங்க இருந்து அப்படியே டிஜிட்டல் நோக்கி வளர்ந்தோம். ஆனா வருமானம் அப்படியே தான் இருந்துச்சு. போராளிக்கு ஓய்வேதுனு எங்களுக்குள்ளையே தைரியத்தை சொல்லிக்கிட்டு துறை சார்ந்து அப்போ தான் கத்துக்க ஆரம்பிச்சேன். ஆபீஸ் பாலிடிக்ஸ் அப்போ இருந்து எனக்கு புரிய ஆரம்பிச்சது. முட்டி மோதி ஓடிகிட்டே இருந்தேன். ஒரே கட்டத்துக்கு மேல யோசிக்கும் போது எனக்கு ஒரே டைம் லூப்குள்ள ஓடிட்டு இருக்குற மாதிரி இருந்துச்சு. ஒரு மாதிரியா இது எனக்கு போதும் ஒரு உணர்வு வர தொடங்கிய காலம். அதாவது வருமான ரீதியாக இல்ல, வேலை ரீதியாக ஓடிட்டே இருந்துச்சு.
அப்போ இத பிரேக் பண்ணி போகணும்னு நெனைக்கும் போது எனக்கு திருமணம் நடந்துச்சு.மத்தவங்க கல்யாணத்துக்கு போகும் போது இது என்ன இப்படி இருக்கு அத அப்படி பண்ணி இருக்கலாம் சொன்னேன். ஆனா அத என்னோட கல்யாணத்துல தான் நான் அனுபவிச்சேன்.

எழுதியவர் : சேவற்கொடி செந்தில் (4-May-22, 7:07 pm)
பார்வை : 102

மேலே