வாராஹி❤
இரு ஹிருதயம்
கொண்டு நடமாடும்
அதிசயபிறவி நான்...
வினாடியும் தவறாது
உனை பாராயணம்
செய்ய ஒன்றும்...
இப்பிறவிக் கடமை
ஆற்ற மற்றொன்றுமாக...
நித்தம் முன்சன்னதி
வந்தடையும் வல்லமை
அருளவில்லை யெனினும்...
இமைதுடிக்கும் நொடிப்
பொழுதினில் விண்ணைத்
தொடும் வல்லமைப்
படைத்த மனம்...
உனை தரிசிக்காமல்
ஒருநாளும் இருந்ததில்லை
என்பது நீமட்டும்
அறிந்த ரகசியம்
அல்லவா...
உன்மேல் நான்
கொண்ட பக்தி
நாளுக்கு நாள்
எனை இயக்கும்
உயிர் சக்தியாக
மாறும் அதிசயம்
அரங்கேறு கின்றதே...
இந்த எளியவளுக்கு
ஒற்றை வரம்
வழங்க மனம்
இறங்கு வாயா
வாராஹி தாயே...
இமை பிரியும்
இளங்காலை பொழுதினில்
மங்களம் துலங்குமுன்
மஞ்சள் முகமென்
மனதில் குடியேற
வேண்டும்...
விழிமூடும் யென்
இரவுப் பொழுதிலும்
உன்மங்கள முகம்
மட்டுமே யென்மனதில்
குடியேற வேண்டும்...
என் கடைமூச்சு
நீங்கும் நேரமும்
உன் நினைவு
என் மனதை
களவாட வேண்டும்...
உன் நினைவோடு
என் கடைபயணம்
நிறைவேற வேண்டும்!!!