மது நீ

கருவிழில் குடியிருக்கும் ராட்க்ஷசியே
காண்பதெல்லாம் நீ தானே,

இருள் சுழு இமை மூடும்
இணைந்திடும் இருவர் உள்ளம்,

கார்மேகம் கரையாமல் கையில்யேந்த
சூடாகும் என் தேகம் இன்ப சுமை நீயாக,

இளநீர் குடிச்சாலும் தீராது தாகம்
ஈரிதழ் இசைத்தாலும் குறையாது மோகம்,

கரங்கள் உனை தாங்கி விரல்கள் விளையாட
வீணை நரம்பாக அதிரும் உன் மேனி,

விலகாது நீ விரும்பியே நான்
விழி மூடி நீ விழி மூடா நான்

மது நீ மயக்கம் தினமும் எனக்கே
திகட்டாத இன்பம் மீண்டும் தினமும்.,

எழுதியவர் : சிவார்த்தி (6-May-22, 4:41 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : mathu nee
பார்வை : 212

மேலே