உனக்காக காத்து

நேரிசை வெண்பா


காதலன் காணவரும் பாதையைக் கண்காக்க
வேதனையா கண்ணொளி கெட்டழகும் - சோதிக்க
நாளைக் குறித்த வழகுவிரல் தேய்த்தசுவர்
வாளா குறிகளைக் காணு

வாளா == பேசாத

குறிகள் == கைவிரல் ரேகைகள்
தன்னைத் தேடி வராத காதலன் வழக்கமாக வரும் வழியின்மேல்
விழிவைத்து காத்து காத்து கண்கள் ஒளியிழந்து அழகும் உருக்
குலைந்தது. மேலும் அவர் வராத நாட்களை எண்ணும் பொருட்டு
சுவரில் அழுந்தத் தேய்த்து குறியீடு செய்ய செய்ய விரலில்
உள்ள ரேகைகள் குறிசொல்லும் நிமித்திகர்கு பேசாக் குறிகளாகிப்
போயிற்று.


காமத்துப்பால். 19/௧





.........

எழுதியவர் : பழனி ராஜன் (8-May-22, 11:41 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 64

மேலே