மகனதிகாரம் -8
மூன்று சக்கர வண்டியை
வேகமாக இயக்கியவன்
தடம் மாறி
என் கால்களில்
இடித்து விட்டான்
மின்னலென இறங்கி வந்து
என் கால்களை தேய்த்து விட்டவன்
உஸ் உஸ் என
எச்சில் தெரிக்கும் உதடுகளால்
ஊதிவிட்டு
ஆறிச்சு என்று சமாதானம்
செய்து வைக்கிறான்.,
என் மனதில் மண்டிக் கிடக்கும்
வலிகளுக்கு இது போன்ற
மருந்து கிடைக்கவில்லையடா
மகனே..
அன்புடன் ஆர்கே..