உலக குடும்ப தினம் மே 15
உலக குடும்ப தினம்
கூட்டு குடும்பம்;
குறையில்லா குடும்பம்;
குதூகலம் நிறைந்த குடும்பம்;
குறைகள் இருந்தாலும் நிறைவாய் இருக்கும் குடும்பம்;
நிம்மதி படர்ந்து இருக்கும் குடும்பம்;
நிறந்தர பாசம் தங்கி குடிகொண்டு இருக்கும் குடும்பம்;
நெருங்கிப் பழகும் குடும்பம்;
நேசமும் பாசமும் நிறைந்த குடும்பம்;
நெருங்கியே வாழும் குடும்பம்;
நிம்மதிதரும் குடும்பம்;
நொருங்காத இதயங்கள்;
நொந்து போகாத உறவுகள் நிறைந்த குடும்பம்;
ஒன்றாய் வாழும் குடும்பம்,
ஒற்றுமையாய் வாழும் குடும்பம்;
ஓதுங்கி ஒதுங்கி போகாத குடும்பம்;
பதுங்கி பதுங்கி பாயாத குடும்பம்;
பாசம் நிறைந்த குடும்பம்;
பத்தாம் பசலிக் குடும்பம்;
பலி தீர்க்க தெரியாத குடும்பம்;
பகடைக்காயாய் உருளாத குடும்பம்;
பண்பாடு நிறைந்த குடும்பம்;
பார்ப்பவர்கள் மதிக்கும் குடும்பம்;
பழகி வாழத் தெரிந்த குடும்பம்;
கூடி வாழ்ந்தால் குடும்பம்;
கொண்டாடி வாழ்ந்தால் குதுகலம்;
உறவுகளுடன் பிணைந்து, இணைந்து வாழும் குடும்பம்;
ஒன்றாய் வாழும் குடும்பம்;
ஓரவஞ்சனை இல்லாத குடும்பம்;
ஒதுக்கி வைக்காத குடும்பம்;
பதுக்கி வைக்காது இருப்பதை பகிர்ந்து உண்டு,ஒன்றாய் உறங்கும் குடும்பம்;
இசைந்து வாழும் குடும்பம்;
இனங்கி வாழும் குடும்பம்;
இருக்கமாக மனவேதனையோடு வாழாத குடும்பம்;
இருப்பதை வைத்து சிக்கனமாய் வாழும் குடும்பம்;
விருந்தினர்கள் வந்தால் விருப்பத்துடன் உபசரிதித்து, விருந்து படைக்கும் குடும்பம்
மதிக்கத் தெரிந்த குடும்பம்;
குற்றம் குறைகளைத் தேடாது,
சுற்றம் சூழா வாழும் குடும்பம்;
சுற்றும் உலகமே பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி என்று,
சுற்றி சுற்றி வரும் உறவுகள் கூடு நிறம்பி வழிந்து சுகமாய் வாழும் குடும்பம்;
கடு கடு; சிடு சிடு என்று இல்லாமல்
சிரித்தே வாழும் குடும்பம்;
கூட்டுக் குடும்பம்; குழப்பம் இல்லாது குதூகலம் கும்மாளத்துடன் வாழும் குடும்பம்;
குற்றம் குறைகளை காணாத குடும்பம்;
தனிமை பிறக்காத குடும்பம்;
தள்ளி தள்ளி நிற்காத குடும்பம்;
தன்னலம் சுயநலம் இல்லாது,
பொதுநலம் நிறைந்த பொறுப்பான குடும்பம்;
கூட்டுக்குடும்பம் என்றால், குற்றம்
குறைகள் காணக்கூடாது;
சுட்டிக்காட்டும் உறவுகளை கட்டிபோட கூடாது;
குந்தகம் விளைவிக்க கூடாது;
கொட்டும் தேளாய் இருக்கக் கூடாது;
உறவுகளை எட்டி உதைக்கக் கூடாது;
உறவுகளை அணைக்காது இருக்கக் கூடாது.
ஆசையாக பழகும் உறவுகளை அசிங்கப்படுத்த கூடாது;
அன்போடு பழகும் உறவுகளை ; பன்போடும் பணிவோடும் அணுகாது இருக்கக்கூடாது.
தாய் தந்தையர்கள் உறவுகளை தள்ளி வைக்கக் கூடாது.
மக்கள் செல்வங்களின் உறவுகளை மக்கவைக்க கூடாது.
மனைவின் உறவை மறந்தது போல் நடிக்கக் கூடாது.
உறவுகளின் உறவுகளை உதரிவிடக் கூடாது;
கூடாது, கூடாது, உறவுகள் பிரியக்கூடாது.
குற்றம் கண்டால் சுற்றம் இல்லை;
உறவுகளை அணை;
குறைகளைத் துடை;
உறவுகள் பிரிவதற்கல்ல;
உறவுகள் புரிவதற்று;
உறவு முறைகள் சிறைப்படுத்த அல்ல;
உறவுக்குள் இல்லை உறக்கம்;
உறவுக்கு இல்லை உருவகம்
உறவுக்குள் வேண்டும் உருக்கமும்; உயிர் ஓட்டமும்;
புரியாத உறவுகள் புதைந்துவிடும்;
பகையான உறவுகள் புகைந்துவிடும்;
தெரியாத உறவுகள் மறைந்துவிடும்;
பிடிக்காத உறவுகள் பிரிந்து விடும்;
வடிக்காத உறவுகள் வடிந்துவிடும்;
படிக்காத உறவுகள் பக்கத்தில் வராமல் போய்விடும்
கிடைக்காத உறவுகள் படைக்காது;
உறவுகள் ஓடுவதில்லை;
உறவுகள் தேடாமல் இருப்பதில்லை;
உறவுகள் ஊமையாவதில்லை;
உறவுகள் உடைவதில்லை;
உறவுகள் உடைந்தாலும் உயிர் பெறாமல் இருப்பதில்லை;
உறவுகள் மரத்துப்போகக் கூடாது,
உறவுகள் மறந்து போகக்கூடாது,
மன்னிக்க வேண்டியது உறவு;
மதிக்க வேண்டியது உறவு;
மறக்க கூடாது உறவு;
விற்கப்படக்கூடாது உறவு;
வீணடிக்கப்பட்ட கூடாது உறவு;
இருக்கும் வரை கூடி வாழ்வோம்;
இருப்பதைக் கொண்டு ஒன்றாய் நன்றாய் வாழ்வோம்;
சிறப்புடன் கூடி வாழ்வோம்;
சிறிது சிறிதாக சேர்த்து, சேர்ந்து வாழ்வோம்;
சிறந்து வாழ்வோம்
இனத்தோடு வாழ்வோம்;
மனித இனத்தோடு வாழ்வோம்;
மனத்தோடு வாழ்வோம்;
மனித நேயத்தோடு வாழ்வோம்.
ஒன்றாய் வாழ்வோம்;
நன்றாய் வாழ்வோம்;
ஒற்றுமையுடன் வாழ்வோம்;
பிறருக்காகவும் வாழ்வோம்;
பிரியத்துடன் பிரியாது உறவுகளுடன் கூடி குடும்பமாய் வாழ்வோம்.
மே 15 இன்று
உலக குடும்ப தினத்தை உலமாற, ஒன்றாய் கூடி குடும்பமாய் அனைவரும், கொண்டாடி மகிழ்வோம்;
அன்பன்
அ. முத்துவேழப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
