சிவன் சொத்து
நெடிதோள் வீரமா வேந்துகள் மடிய
அந்நியர் படையெ டுத்துக் கோட்டை
கொத்தளம் அழித்தார் மண்கோட்டை
மண்ணோடு மண்ணாக கற்கோட்டை வெளவால்
தொங்கி பாழாகி சீண்டா போனது
மன்னரின் திருக்கோயில் அனைத்தும் கொள்ளை
செய்து கொண்டு சென்றார் மிலேச்சர்
கோட்டை பாழாக குடியாரும் புகவில்லை
மன்னர் இல்லா கோயில் நிலத்தினை
வலுத்த் வன்தன் சொத்தாக்கி
சான்றினை அழித்து நன்றாய் கொழுத்தானே
சிவன் சொத்து குலநாசம்