நாணிக் கோணி

நேரிசை சிந்தியல் வெண்பா

மதங்கள் பலவாய் முளைக்க விதையை
விதவிதமாய் இட்டது இங்கே - எதுவோ
அதுவே புடைமிகு புண். (க)

பிழைகளை செய்தவனே சட்ட மியற்றும்
வழியை வகுப்பவ னென்னும் - வழியை
செழிப்பாய் தருவது நூல் (உ)

அயலக நாட்டின் தொழிலோர் படையால்
பயத்தையும் இங்கே பலமாய் - உயர்த்த
சுயத்தை இழந்ததாய் நாம் (ங)

மழையின் நெடும்பாதை ஆறாய் இருக்க
பிழையாய் அதனை தடுத்தே - அழித்தோம்
செழித்தால் அழிக்கும் நதி (ச)

படிப்பிலே நாட்டம் வெகுவாய் வளர
கடியாய் தவறுகள் செம்மையாய் - நீடிக்க
கிடைப்பது யாவையும் பாழ் (ரு)

உறவுகள் என்றுமே ஏளனித்தே பார்க்கும்
வெறுமனே நம்மை உசுப்பி - வெறுப்பால்
நிறைப்பர் மனதை உணர் (சா)

பொய்யே தினமும் வரலாற்றை ஆக்குமே
மெய்யை உரைப்போர் இழிவினை - செய்வதாய்
வெய்யிலால் கூறுவர் பார் (எ)

பாலும் தயிரும் பிரிந்தநல் மோருடன்
நாலுத் துணுக்கினில் இஞ்சியை - சாலவே
வாலியுடன் உண்ணல் நலம் (அ)

அரசும் அதையாளும் மன்னரும் இன்று
திருடும் வகையிலே திட்டம் - பெருக்கி
உரிமையாய் ஆள்வதே ஏண். (கூ)
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (20-May-22, 9:44 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 39

மேலே