THAT PIZZA MAALAIP POZHUTHU

நீயும் நானும்
PIZZA சாப்பிட்டுக் கொண்டிருந்த போது
வாலாட்டிக் கொண்டு
ஒரு குட்டி வெள்ளை
வந்தது
ஒரு துண்டு PIZZA
அதற்கு நீ
உன் சிவந்த விரல்களால் ஊட்டினாய்
மேலும் வாலாட்டியது
வெள்ளை நாய்
முழுத் தட்டையும் அதன்முன்
வைத்துவிட்டு
நாம் கைகோர்த்து
நிலவுப் பாதையில் நடந்த
அந்த
மாலைப் பொழுது
உனக்கு நினைவிருக்கிறதா
சிநேகிதி ?

எழுதியவர் : KAVIN CHARALAN (21-May-22, 12:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே